மஹிந்த கஹந்தகமவுக்கு 26ஆம் திகதி வரை விளக்கமறியல்
விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கொழும்பு மாநகரசபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் உறுப்பினரான மஹிந்த கஹந்தகம, எதிர்வரும் அக்டோபர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டிந்ததோடு தொடர்ச்சியான விசாரணைகளில் அவர் போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் இருந்த காணொளிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதேநேரம், அவருடன் கைது செய்யப்பட்ட மற்றைய நபருக்கு 15,000 ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





