Home » கேளிக்கை » யோகிபாபு படத்துக்கு எதிர்ப்பு

யோகிபாபு படத்துக்கு எதிர்ப்பு

படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran21 Aug 2019 3:51 PM GMT
யோகிபாபு படத்துக்கு எதிர்ப்பு
Share Post

யோகிபாபு, வருண் நடிப்பில் தயாராகும் பப்பி படமும் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

இந்த படத்தை முரட்டு சிங்கிள் இயக்குகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இதில் ஒரு பக்கத்தில் நித்யானந்தா சாமியாரின் படமும் இன்னொரு பக்கத்தில் ஆபாச படங்களில் நடிக்கும் ஜான்னி சின்ஸ் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது.

இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிவசேனா கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.