Home » சட்டம் & அரசியல் » வெளிநாட்டு புலனாய்வாளர்கள் சிறிலங்காவில் உள்ளனர்

வெளிநாட்டு புலனாய்வாளர்கள் சிறிலங்காவில் உள்ளனர்

சிறிலங்காவில் செயல்பட்டு வந்தன என்பதற்கு ஆதாரம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

👤 Sivasankaran10 Dec 2020 9:19 AM GMT
வெளிநாட்டு புலனாய்வாளர்கள் சிறிலங்காவில் உள்ளனர்
Share Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் புதிய ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்காக மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்ற விரும்பிய குழுவுக்கும் இடையே சாத்தியமான தொடர்புகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கையை இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தம்மை பொறுத்தவரையில் சஹ்ரானை வெளியிலிருந்து ஒரு சக்தி கையாண்டது என்று சந்தேகம் இருப்பதாக சாட்சியான தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார். உள்ளூர் புலனாய்வு பிரிவுகளுக்கு கூட தெரியாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளிநாட்டு உளவுத்துறை சேவை எவ்வாறு எச்சரிக்கை செய்தது என்றும் ஜயசேகர இதன்போது கேள்வி எழுப்பினார். இதன்படி வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் சிறிலங்காவில் செயல்பட்டு வந்தன என்பதற்கு ஆதாரம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியமளித்தபோதே தயாசிறி ஜயசேகர இந்த கோரிக்கையை விடுத்தார்.