Home » முதன்மைச் செய்திகள் » தேர்தல் வர உள்ளதால், வரவு செலவு திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கலாம் - மஹிந்த

தேர்தல் வர உள்ளதால், வரவு செலவு திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கலாம் - மஹிந்த

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஏற்கனவே தாமதமாகியுள்ள ஏனைய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

👤 Sivasankaran5 Jan 2019 2:24 PM GMT
தேர்தல் வர உள்ளதால், வரவு செலவு திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கலாம் - மஹிந்த
Share Post

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஏற்கனவே தாமதமாகியுள்ள ஏனைய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கேகாலை, கொட்டியாக்கும்புர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மத நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகங்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பேசினார்.

அப்போது, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஏற்கனவே தாமதமாகியுள்ள ஏனைய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், பல தேர்தல்கள் எதிரில் நடைபெற உள்ளதால் வரவு செலவு திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன் பின்னர் மீண்டும் விலைவாசிகள் அதிகரிக்கலாம் என்றும் அவர் கூறினார். விலைவாசி அதிகரிப்பதற்கு தாம் அனுமதிக்கப் போவதில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.