Home » விஞ்ஞானம் & தொழில்நுட்பம் » நிலவில் எடுத்த பாறைகளுடன் பூமியை வந்தடைந்தது சீன விண்கலம்

நிலவில் எடுத்த பாறைகளுடன் பூமியை வந்தடைந்தது சீன விண்கலம்

சீனாவின் உள்-மங்கோலிய மாகாணம் சிசிவாங்க் மாவட்டத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

👤 Sivasankaran17 Dec 2020 6:24 AM GMT
நிலவில் எடுத்த பாறைகளுடன் பூமியை வந்தடைந்தது சீன விண்கலம்
Share Post

நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக இருந்து கடந்த மாதம் 24-ந்தேதி சீனா ஒரு விண்கலம் அனுப்பியது.

'சேஞ்ச்-5' (Chang'e-5) என்ற அந்த ஆளில்லா விண்கலம் இந்த மாதம் 1-ஆம் தேதி நிலவில் பத்திரமாக தரை இறங்கியது. அங்கு திட்டமிட்டபடி கற்கள், பாறைகள் போன்றவற்றை சேகரித்தது.

'சேஞ்ச்-5' Chang'e-5) விண்கலம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் சீனாவின் உள்-மங்கோலிய மாகாணம் சிசிவாங்க் மாவட்டத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதையடுத்து, அந்த விண்கலத்தில் கொண்டுவரப்பட்ட நிலவின் பாறை, கல் துகள்களை சேகரித்த சீன விண்வெளி விஞ்ஞானிகள் அதை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.