Home » உலகச் செய்திகள் » அதிபர் பதவியை துச்சமென உதரித்தள்ளிய மதபோதகர் மரணமடைந்தார்

அதிபர் பதவியை துச்சமென உதரித்தள்ளிய மதபோதகர் மரணமடைந்தார்

அமெரிக்காவின் மிகப் பிரபலமான மதபோதகரான பில்லி கிரகாம், உடல் நலக்குறைவால் புதன்கிழமை இரவு மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 99.

👤 Saravana Rajendran22 Feb 2018 3:43 PM GMT
அதிபர் பதவியை துச்சமென உதரித்தள்ளிய மதபோதகர் மரணமடைந்தார்
Share Post

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான மதபோதகர்களில் ஒருவர் பில்லி கிரகாம். அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த கிரகாம் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மத போதனைகளை வழங்கியுள்ளார்.சாதாரண மனிதர்கள் முதல் பல நாட்டின் அதிபர்கள் வரை இவரது மத போதனைகளை பின்பற்றுபவர்கள் ஏராளம். நேரடியாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் உலகிலேயே அதிக மக்களுக்கு மதபோதனைகளை வழங்கியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.சுமார் 70 ஆண்டுகளாக ஆன்மீக பணியாற்றி வந்த பில்லி கிரகாம், புதன்கிழமை காலை உடல்நலக் குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார். 99 வயதாகும் பில்லி கிரகாமிற்கு பலரும் அஞ்சலி தெரிவித்துவருகின்றனர்.