சீரற்ற காலநிலையால் 5747 பேர் பாதிப்பு
தொடரும் மழையுடனான காலநிலை காரணமாக இன்றும் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் 166 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட 1,594 குடும்பங்களை சேர்ந்த 5747 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் முழுமையாகவும் 953 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தொடரும் மழையுடனான காலநிலை காரணமாக இன்றும் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.