சுற்றாடல் அமைச்சக்கு முன்னால் பொதுமக்களால் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள், தற்போதைய சுற்றுச்சூழல் அமைச்சரான தம்மிகா பெரேரா, யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டார்.
சுற்றாடல் அமைச்சக்கு முன்னால், காவந்திஸ்ஸ என்ற யானையின் உயிரிழப்பிற்கு நீதி கோரி, சமூக ஊடக செயற்பட்டாளர்கள் மற்றும் பொதுமக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் முதன்மை நோக்கம், வனவிலங்குகள் பாதுகாப்பில் அரசு மற்றும் சுற்றாடல் அமைச்சகம் காட்டும் அலட்சியத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதாகும். போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள், தற்போதைய சுற்றுச்சூழல் அமைச்சரான தம்மிகா பெரேரா, யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டார்.
வனவிலங்குகளுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள், விஷம் வைக்கும் சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிப் பயன்பாடுகளைத் தடுக்கத் தவறியதற்காக, அவர் தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்பதைப் போராட்டக்காரர்கள் ஒரு முக்கிய கோரிக்கையாக முன்வைத்தனர்.





