ஞானசார தேரரின் காவி உடை தீர்மானத்திற்கு எதிரான மனு 22 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு
அந்நீதிபதிகள் முன்னிலையிலேயே இம்மனுக்கள் நேற்றைய தினம் அழைக்கப்பட்டன.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி எழுத்துமூல உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் 15-10-2026 அன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனுக்களை பரிசீலிப்பதற்காக அமல் ரணராஜா, மஹேன் கோபல்லவ மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட புதிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் பெயரிடப்பட்டுள்ளதுடன், அந்நீதிபதிகள் முன்னிலையிலேயே இம்மனுக்கள் நேற்றைய தினம் அழைக்கப்பட்டன.
தீனியாவல பாலித தேரர் உள்ளிட்ட பிக்குகளால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இம்மனுக்கள் பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட வேளையில், முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விடயங்களை பரிசீலித்த நீதிபதிகள் குழாம், மேலதிக பரிசீலனைகளுக்காக மனுக்களை மீண்டும் எதிர்வரும் 22 ஆம் திகதி அழைப்பதற்கு தீர்மானித்திருந்தது.





