மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - பிரதமர் ஹரிணி
தொழிற்கல்விக்குத் தகுந்த அங்கீகாரத்தை வழங்கும் வகையில், 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி நவீன பாடநெறிகளுடன் கூடிய 50 தொழிற்கல்வி நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிதியைப் பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகச் சரியான முறையில் பயன்படுத்துமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
வெல்லவாய பிரதேசத்தில் 02-03-2026 அன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான கோரிக்கைகளை முன்வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். தொழிற்கல்விக்குத் தகுந்த அங்கீகாரத்தை வழங்கும் வகையில், 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி நவீன பாடநெறிகளுடன் கூடிய 50 தொழிற்கல்வி நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
2027ஆம் ஆண்டு முதல் 6ஆம் தரத்திற்கான புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு, புதிய பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகளைக் கல்வி அமைச்சின் வெளியீட்டுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.





