யோஷித கடற்படையில் இருந்தபோது 51 இலட்சத்து 50 ஆயிரத்து 626 ரூபா சம்பளம்
யோஷித கனிஷ்க ராஜபக்ஷ 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை கடற்படையில் லெப்டினன்ட்டாகப் பணியாற்றினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ கடற்படையில் பணியாற்றிய 10 வருட காலப்பகுதியில் அவருக்கு சம்பளமாக 51 இலட்சத்து 50 ஆயிரத்து 626 ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக அரச தரப்பு சாட்ச்சியாளரான கடற்படை அதிகாரி நுவன் துஷார கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியம் அளித்திருந்தார்.
பண சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் , அரச தரப்பு சாட்ச்சியாளர்களின் மேலதிக சாட்ச்சி விசாரணை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் 15-10-2026அன்று பதிவுசெய்யப்பட்டது.
இதன்போது, அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஒஸ்வால்ட் பெரேராவின் நெறிப்படுத்தலின் கீழ் சாட்சியமளித்த கடற்படை அதிகாரி தம்மிக பிரியதர்ஷன விக்ரமஆரச்சி, ” கணம் நீதிவான் அவர்களே!
யோஷித கனிஷ்க ராஜபக்ஷ 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை கடற்படையில் லெப்டினன்ட்டாகப் பணியாற்றினார். 2016 பெப்ரவரி 28 ஆம் திகதி அவரது சேவை இடைநிறுத்தப்பட்டது. அவருக்கு மாதாந்தச் சம்பளமாக 16,500 ரூபா கிடைத்துள்ளது. அதிலிருந்து 110 ரூபா குறைக்கப்பட்டு, 16,390 ரூபா சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. கொடுப்பனவுகள் உள்ளடங்கலாகவே இந்த மாதாந்த சம்பளம் அவருக்கு கிடைத்துள்ளது.





